/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு கட்டும் திட்டத்தில் 'வசூல்' அதிகாரிக்கு 'பெப்பே'
/
வீடு கட்டும் திட்டத்தில் 'வசூல்' அதிகாரிக்கு 'பெப்பே'
வீடு கட்டும் திட்டத்தில் 'வசூல்' அதிகாரிக்கு 'பெப்பே'
வீடு கட்டும் திட்டத்தில் 'வசூல்' அதிகாரிக்கு 'பெப்பே'
ADDED : ஆக 28, 2024 04:57 AM
கடலுார் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராம ஊராட்சியில் கருணாநிதி கனவு இல்லத்தில் அதிகபட்சம் 15 வீடுகளும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகபட்சம் 50 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயனாளிகள் தேர்வு செய்த நிலையில், அந்த ஊராட்சியின் செயலர், தலைவர் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது என்பதை காரணம் காட்டி, வீட்டிற்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியுள்ள நிலையில், அனுமதி கிடைக்காத பணம் கொடுத்தவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். அவர்கள், சம்மந்தப்பட்ட ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
பொறுமையாக கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட அந்த ஊராட்சி செயலர், தலைவர் மற்றும் ஏற்கனவே இருந்த அந்த அதிகாரிக்கு சேர வேண்டியதை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான புது அதிகாரி, பணி மாறுதலில் சென்ற பழைய அதிகாரியை தொடர்பு கொண்டு இந்த மேட்டரை பேசியுள்ளார். அதிர்ந்து போன அந்த அதிகாரி, அப்படி ஒன்றும் இல்லை என, கூறியுள்ளார்.
மிக குறைந்தகாலத்தில் பணியில் சேர்ந்த அந்த ஊராட்சி செயலரின் இந்த தில்லாலங்கடி வேலை, சம்மநத்ப்பட்ட அதிகாரியை அதிர்ச்சி அடைய செய்தது.

