/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் ஸ்டாலின் ரோட் ேஷா விருதையில் மக்கள் உற்சாகம்
/
முதல்வர் ஸ்டாலின் ரோட் ேஷா விருதையில் மக்கள் உற்சாகம்
முதல்வர் ஸ்டாலின் ரோட் ேஷா விருதையில் மக்கள் உற்சாகம்
முதல்வர் ஸ்டாலின் ரோட் ேஷா விருதையில் மக்கள் உற்சாகம்
ADDED : பிப் 22, 2025 10:18 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த திருப்பெயரில் நேற்று நடந்த 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முன்னாதாக, நெய்வேலியில் இருந்து புறப்பட்டு. விருத்தாசலம் வழியாக மாநாடு நடக்கும் இடத்திற்கு சென்றார்.
அப்போது, விருத்தாசலம் பெரியார் நகரில் இருந்து, மாநாடு நடக்கும் திருப்பெயர் வரை தி.மு.க., வினர் அளிக்க காத்திருந்தனர்.
காலை 10:32 மணிக்கு விருத்தாசலம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் கூட்டத்தை பார்த்ததும், விருத்தாசலம் தீயணைப்பு நிலையம் அருகே கேரவனில் இருந்து இறங்கி நடக்க துவங்கினார்.
பின்னர்,சாலையோரம் நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களிடம் கை குலுக்கினார். 10 நிமிடத்திற்கு மேல் மெதுவாக நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர், விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் வந்ததும் மீண்டும் கேரவனில் ஏறினார்.
அதன்பின், வழி நெடுகிலும், நின்றிந்த பொதுமக்கள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்று, கையசைத்தவாறு சென்றார். காலை 11:05 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து மாநாடு நடக்கும் திருப்பெருக்கு புறப்பட்டு சென்றார்.