/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாய்கள் தொல்லையால் நெல்லிக்குப்பத்தில் மக்கள் அச்சம்
/
நாய்கள் தொல்லையால் நெல்லிக்குப்பத்தில் மக்கள் அச்சம்
நாய்கள் தொல்லையால் நெல்லிக்குப்பத்தில் மக்கள் அச்சம்
நாய்கள் தொல்லையால் நெல்லிக்குப்பத்தில் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 18, 2024 05:41 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகளில், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவைகள், தெருக்களில் நடந்து செல்பவர்களை துரத்துவதும் கடிப்பதுமாக உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாய்களை பிடிப்பதில், கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய சொல்கின்றனர். இதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லை. செலவு அதிகமாகிறது. இதனால், நகரில் நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்கின்றனர்.
நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையம் அமைக்க பல லட்சம் நிதி ஒதுக்கினர். ஆனால் அந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் இதுவரை ஒரு நாய்க்கு கூட கருத்தடை செய்யவில்லை. இதனால், நாளுக்கு நாள் நகரில் நாய்கள் அதிகரித்து வருகிறது.