/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரம் அருகே மக்கள் போராட்டம்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரம் அருகே மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரம் அருகே மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரம் அருகே மக்கள் போராட்டம்
ADDED : மார் 06, 2025 01:54 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியுடன், இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, சி.கொத்தங்குடி ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது சி.கொத்தங்குடி, லால்புரம், பரமேஸ்வரநல்லுார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை, சிதம்பரம் நகராட்சியும் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஊராட்சி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று சி.கொத்தங்குடி ஊராட்சி பொதுமக்கள், சிதம்பரம் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், முன்னாள் ஊராட்சி தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். ஜெயசீலன் வரவேற்றார். மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, நகரத் தலைவர் அமுதா, அம்சா வேணுகோபால், பாபுராஜன், ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
கிராம மக்கள், அரசியல் கட்சியினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போரட்டத்தை தொடர்ந்து, சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.