/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி
ADDED : மே 27, 2024 05:39 AM

புவனகிரி: புவனகிரி அருகே ஆலம்பாடி - மருதுார் இணைப்பு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலையை சந்திக்கும் வகையில் தார்சாலை உள்ளது. புவனகிரி சுற்றுப்பகுதியில் இருந்து வருபவர்கள் மற்றும் வயல்களுக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மருதுார், தலைக்குளம், உளுத்துார், அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம் வழியாக பின்னலுார் பகுதிக்கும், கொளக்குடி வழியாக வடலுார், உடையூர் வழியாக சேத்தியாத்தோப்பு பகுதிக்கும் செல்கின்றனர்.
இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இதனால் பகல் வேளையில் கூட செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையை கடந்து செல்ல மக்கள் அச்சமடைகின்றனர்.
எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

