/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 13, 2024 05:50 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மொத்தம் 552 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், களஆய்வு செய்தும், துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.