/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு
/
ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 06, 2024 05:52 AM

நெல்லிக்குப்பம்: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் புதியதாக சாலை போடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.
நெல்லிக்குப்பம் நகராட்சி சரவணபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் புதியதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை போட கூடாது.பழைய சாலையே தரமாக இருக்கும் போது புதியதாக சாலை போடுவது ஏன் எனக்கேட்டு பொதுமக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து கமிஷனர் கிருஷ்ணராஜன்,இன்ஜினியர் வெங்கடாஜலம் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.சர்வேயர் மூலம் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தனர்.
இதையேற்று மக்கள் கலைந்து சென்ற பிறகு சாலை போடும் பணி தொடர்ந்து நடந்தது.இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

