/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பா.ம.க., தங்கர்பச்சான் அதிரடி
/
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பா.ம.க., தங்கர்பச்சான் அதிரடி
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பா.ம.க., தங்கர்பச்சான் அதிரடி
மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பா.ம.க., தங்கர்பச்சான் அதிரடி
ADDED : ஏப் 12, 2024 04:25 AM

பெண்ணாடம் : கடலூர் லோக்சபா தொகுதியில் நான் வெற்றி பெற்றால், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கூறினார்.
பா.ஜ., கூட்டணியில், கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நேற்று திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நல்லூர் ஒன்றியம் கிராமங்களான பெலாந்துறை, முருகன்குடி, கிளிமங்கலம், பாசிகுளம், கணபதிகுறிச்சி, வெண்கரும்பூர், நந்தப்பாடி, கோவிலூர், சிறுமங்கலம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: கடலூர் தொகுதியில் எம்.பி,.யாக வெற்றி பெற்றவர்கள் தொகுதியை பற்றி சிந்திக்கவில்லை. தொகுதியை எட்டிப் பார்க்கவும் இல்லை. என்னை கடலூர் லோக்சபா தொகுதியின் பொது வேட்பாளராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். நான் வெற்றி பெற்றால் மக்களுடைய பல ஆண்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். திட்டக்குடி சட்டசபை தொகுதியின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன்' என்றார்
அப்போது, பா.ம.க,, மாநில இளைஞர் அணி சங்க செயலாளர் சுரேஷ், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருஞானம், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் தமிழ் அழகன், பா.ம.க,, மாநில செயற்குழு உறுப்பினர் தனபாண்டியன், மாவட்டத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஞானவேல், மாநில இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் மோகன், மகளிர் சங்க செயலாளர் சத்தியபானு, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கராஜன், ஒன்றிய தலைவர் காமராஜ், அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

