ADDED : ஆக 24, 2024 06:33 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனுவாசபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 21ம் தேதி துவங்கியது. 22ம் தேதி 2ம் கால பூர்ணாகுதியும், மூலவர் திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, விஸ்வரூபம், காலசந்தி ஆராதனம், அக்னி ஆராதனமும், 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைக்கப்பட்டது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் மூர்த்தி சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் அசோக்குமார், செயலாளர் ராஜாராம், பொருளாளர் ரவி, பத்மசாலியர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

