/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருங்காலுார் கோவில் கும்பாபிேஷகம்
/
பெருங்காலுார் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மே 21, 2024 05:25 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெருங்காலுாரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தலைமையான குழுவினர், நடத்தி வைத்தனர்.
நிகச்சியில் ஈஸ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஸ்வர் மற்றும் முக்கிய பிரிமுகர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
திட்டக்குடி
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் விநாயகர், முத்துமாரியம்மன், சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பூஜைகள் கடந்த 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையிலிருந்து புனிதநீர் புறப்பாடாகி, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.

