/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ADDED : ஜூன் 15, 2024 05:45 AM

கடலுார்': ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி கோடி கணக்கில் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
கடலுார் ஆல்பேட்டை, குண்டு உப்பலவாடியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மற்றும் அவரது உறவினர்கள் 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு கூட்டாக நடத்தி வந்தனர்.
அவர்களிடம், கடலுார், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தீபாவளி சீட்டிலும், ஏலச்சீட்டிலும் சேர்ந்து ஒரு லட்சம், 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம், 30 லட்சம் என மொத்தம் கோடி கணக்கில் பணம் கட்டியுள்ளோம். இறுதியாக சீட்டு முடிந்து பணம் கொடுக்காமல் பல நாட்களாக ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து கடலுார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்ப பெற்றுத்தரஎஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.