/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைகேட்பு கூட்டத்தில் தாம்பூல தட்டுடன் மனு
/
குறைகேட்பு கூட்டத்தில் தாம்பூல தட்டுடன் மனு
ADDED : ஜூலை 23, 2024 02:23 AM

கடலுார்: ஏரி நீர்வரத்து பகுதியில் வீட்டுமனை போடுவதை தடுக்க கோரி, பொதுமக்கள் தாம்பூல தட்டுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள், கொடுத்துள்ள மனு:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய ஏரி எல்லையில், ஏரிக்கு நீர்வரத்து பகுதியில் சிலர் வீட்டுமனை போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இம்மனை பிரிவில் ஏரி இடமும் இருப்பதாக கூறப்படுகிறது. மனை பிரிவு போடும்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தெரிவிக்காமல் மனை பிரிவு போட்டு விற்பனை செய்கின்றனர். இம்மனை பிரிவால் ஏரிக்கு வருங்காலங்களில் நீர்வரத்து முழுமையாக தடைபடும் நிலை ஏற்படக்கூடும். இதனால் விவசாயிகள் மற்றும் விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படும். எனவே ஏரி இடத்தை பாதுகாக்கவும், நீர் வரத்து குறையாமல் இருக்க ஏரியை முழுமையாக அளவீடு செய்து, நான்கு புறமும் எல்லை குறியீடு கற்கள் அமைத்து முழு பரப்பளவு வரைபடத்தை அறிவிப்பு பலகையாக வைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.