/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாறு நாள் வேலை கேட்டு சி.என்.பாளையத்தில் மறியல்
/
நுாறு நாள் வேலை கேட்டு சி.என்.பாளையத்தில் மறியல்
ADDED : ஆக 04, 2024 12:25 AM

நடுவீரப்பட்டு: நுாறு நாள் வேலை வழங்க கோரி, சி.என்.பாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை அனைவருக்கும் வழங்க வலியுறுத்தியும், அரசு நிர்ணயம் செய்த ரூ. 319 வழங்கிட வலியுறுத்தியும், வேலை 100 நாள் என்பதை 200 நாட்களுக்கு வழங்க கோரியும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சி.என்.பாளையம் மாதா கோவில் அருகே காலை 11:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
சங்க ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடலுார் ஊராட்சி பி.டி.ஓ., அலுவலக ஒன்றிய மேற்பார்வையாளர் ஜோதி பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி ஒருவாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுதது, காலை 11:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.