/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாறுநாள் வேலை கேட்டு திட்டக்குடி அருகே மறியல்
/
நுாறுநாள் வேலை கேட்டு திட்டக்குடி அருகே மறியல்
ADDED : ஆக 01, 2024 07:02 AM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் கிராமத்தில் நுாறுநாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரியும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லுார் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியில் சாத்தநத்தம் துணை கிராமமாக உள்ளது.
இந்த ஊராட்சியில் சாத்தநத்தம் கிராம மக்களுக்கு முறையாக நுாறுநாள் வேலை வழங்காததை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும் நேற்று காலை 10:30 மணியளவில் கிராமம் வழியே வந்த அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், நல்லுார் துணை பி.டி.ஓ., சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர்.
அதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.