/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அச்சகத்தில் திருட்டு; வடலுாரில் துணிகரம்
/
அச்சகத்தில் திருட்டு; வடலுாரில் துணிகரம்
ADDED : மே 22, 2024 12:44 AM
வடலுார் : வடலுாரில் தனியார் அச்சகத்தின் பூட்டை உடைத்து 21 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடலுார் பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 50; வடலுாரில், நெய்வேலி மெயின் ரோட்டில், அச்சகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அச்சகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலை திறக்க வந்தார்.
அப்போது, அச்சகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியை உடைத்து, அதிலிருந்த ரூ.21 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, அச்சகத்தில் திருடியவரை தேடி வருகின்றனர்.

