ADDED : ஜூன் 05, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விருத்தாசலம் பாலக்கரையில் பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யக் கோரி விழிப்புணர்வு போராட்டம் நடந்தது.
நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணை செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார். அதில், பிளாஸ்டிக் கப்புகளை உடையில் ஒட்டிக்கொண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. நிர்வாகிகள் ராஜதுரை, ராஜேந்திரன், ஜெகநாதன், தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யக் கோரி மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
