/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை அதிகாரிகள் 'குறட்டை'
/
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை அதிகாரிகள் 'குறட்டை'
ADDED : ஜூன் 04, 2024 04:22 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் பகுதியில், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
சுற்றுச்சூழலை தடுக்கவும், மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு அரசு தடை விதித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், கடந்த மே மாதம் 6ம் தேதி முதல் பிளாஸ்டிக் விற்பனைக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தடை விதித்தார். மேலும், இதை நடைமுறைப்படுத்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமாரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து, கலெக்டர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் கலெக்டரின் உத்தரவை செயல்படுத்துவதில் அதிகாரிகள் ஆர்வம் இல்லாமல் உள்ளதால், நெல்லிக்குப்பம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவில்லை.
பிளாஸ்டிக் பைகளை பிடிப்பதோ அல்லது பயன்படுத்தும் கடைகளின் அனுமதியை ரத்து செய்வதோ எதுவும் நடக்கவில்லை. கலெக்டர் நேரடியாக தலையிட்டு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்யாமல், சிறிய வியாபாரிகளை துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம், இதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.