ADDED : ஏப் 22, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை சிங்கார வீதியைச் சேர்ந்தவர் மன்சூர்அலி மகன் கலிபா ,35; பிளம்பர் வேலை பார்க்கும் இவர் நேற்று காலை ரம்ஜான் தைக்கால், முகமது தாஹிர், என்பவரின் வீட்டிற்கு சென்று, மாடியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியினை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் இடது கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி எறிந்து சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்.
இவருக்கு திருமணமாகி ஹைருன்னிசா என்ற மனைவி உள்ளார். புகாரின் பேரில் காட்டுமன்னர்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

