/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ
/
சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ
ADDED : ஆக 09, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்து வரும் 16 வயது மாணவர் தனது உறவினர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியுடன் சிறுவன் நெருங்கி பழகி வந்ததால் சிறுமி 2 மாத கர்ப்பிணியானார்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தினகரன் புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.