ADDED : மார் 11, 2025 05:16 AM
குறிஞ்சிப்பாடி : பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வேலவிநாயகர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் விநாயகமூர்த்தி. இவரது மனைவி சரண்யா, 27; இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன் விநாயகமூர்த்தி, செகண்ட் ஹேண்ட் கார் ஒன்றை வாங்குவதற்காக சரண்யாவின் நகையை அடமானம் வைக்க அவரிடம் நகையை கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, சரண்யா அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் விநாயகமூர்த்தி, சரண்யாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், சரண்யா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சரண்யாவின் சகோதரர் தெய்வநாயகம் அளித்த புகாரின் பேரில் விநாயகமூர்த்தி, அவரது தந்தை ஹரிதாஸ், தாய் சுந்தரி ஆகிய 3 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.