/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., பிரமுகர் தாக்கு 5 பேருக்கு போலீஸ் வலை
/
பா.ம.க., பிரமுகர் தாக்கு 5 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஏப் 14, 2024 05:49 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பா.ம.க., பிரமுகரை தாக்கிய 5பேர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே எலவத்தடி கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், 40; பா.ம.க., பிரமுகர். நேற்று முன்தினம் மாலை பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் அந்த கிராமத்திற்கு பிரசாரம் செய்தார். அவரை வரவேற்கும் வகையில் முருகவேல் பா.ம.க., கொடி தோரணம் கட்டியிருந்தார்.
பிரசாரம் முடிந்து தங்கர்பச்சான் சென்ற பிறகு, கிராமத்தில் நின்றிருந்த முருகவேலை, அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி மகன்கள் சிவசிதம்பரம், விஜயகாந்த், சுப்ரமணியன் மகன்கள் சிவகண்டன், மணிகண்டன் மற்றும் ராமர் ஆகிய 5 பேரும், முன்விரோதம் காரணமாக இரும்பு குழாயால் தாக்கினர்.
படுகாயமடைந்த முருகவேல், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடலூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் சிவசிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

