ADDED : மார் 08, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மாயமான கார் மெக்கானிக்கை போலீஸ் தேடி வருகிறது.
விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழரசன் மகன் பூவரசன், 24. கார் மெக்கானிக். இவரது மனைவி கோமதி, 24; தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 5ம் தேதி காலையில், பழுதான கார் ஒன்றை பழுதுநீக்க செல்வதாகக் கூறி சென்ற பூவரசன் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கோமதி புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான மெக்கானிக்கை தேடி வருகின்றனர்.