ADDED : ஆக 04, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அஞ்சல் சேவைவிழிப்புணர்வு மற்றும் ஆதார் பதிவு திருத்த முகாம் நடந்தது.
கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் அஞ்சல் சேவைகள் குறித்து பேசினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அரவிந்த் உடல் உறுப்பு தானத்தின் அவசியம்குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேவநாதன், ஊராட்சி் தலைவர் முத்துலிங்கம், பள்ளித் தலைமை ஆசிரியர் பொய்யாமொழி, உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாலமுரளிபங்கேற்றனர். விழாவில், அஞ்சல் கணக்கு துவங்கப்பட்டு மாணவர்களுக்கு கணக்கு புத்தகம்வழங்கப்பட்டது.