
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோக நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை பிரதோஷ பூஜைகள் நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், உட்பட 18 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர். கைலாசநாதர். நடனபாதேஸ்வரர் திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர் எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.