நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி வினோதினி,28. அதே பகுதியை சேர்ந்தவர் பக்கிரி மனைவி சரளா. இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
சரளா தமது வீட்டு காதணி விழா பத்திரிக்கை வைக்க வினோதினி வீட்டிற்கு சென்றார்.
வினோதினி பத்திரிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சரளா அதே பகுதியை சேர்ந்த தம்பி வீரராஜிடம் கூறினார்.
ஆத்திரமடைந்த வீரராஜ் குடிபோதையில் வினோதினி வீட்டிற்கு சென்று வினோதினி, அவரது கணவர் கோவிந்தராஜ், உறவினர் கருணாகரன் ஆகிய 3 பேரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.