/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு இயந்திரங்களை பாதுகாக்க அறைகள் தயாராகிறது
/
ஓட்டு இயந்திரங்களை பாதுகாக்க அறைகள் தயாராகிறது
ADDED : மார் 27, 2024 07:17 AM

கடலுார் : கடலுார் லோக் சபா தொகுதிகளுக்கான ஓட்டு இயந்திரங்களை பாதுகாக்க, கடலுார் கல்லுாரியில் அறைகள் தயாராகி வருகிறது.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாத்து வைக்கப்படுகிறது.
இங்குள்ள வைப்பு அறைகளின் உறுதித்தன்மை மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிப்பதற்கு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகி்றது.
இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சரியான அளவில் ஓட்டு எண்ணிக்கை முகவர்களை அனுமதிக்கவும், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பாதுகாப்பான முறையில் ஓட்டு எண்ணிக்கை பணி மேற்கொள்ள தடுப்புகள் அமைப்பது மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

