/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
/
பள்ளி மாணவருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 23, 2024 04:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
கடலுாரில் பள்ளி கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, மாவட்ட அளவிலான நுண்கலை படம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளி மாணவர் புவனேஸ்வரனுக்கு பரிசு வழங்கினார்.
மாணவரை முதன்மைக் கல்வி அதிகாரி பழனி, பள்ளித் தலைமை ஆசிரியர் தேவநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வான்மதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், ஆசிரியர்கள் அருணா சிந்துஜா, ஷோபனா பாராட்டினர்.