ADDED : மார் 01, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிரதமரின் கிசான் சம்மான் சமரோஹ் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.
பீகார் மாநிலம், பாகல்பூரில், பாரத பிரதமரின் பி.எம்., கிசான் திட்டத்தில் கிசான் சம்மான் சமரோஹ் நிகழ்ச்சியின் 19வது தவணை நடந்தது. கடந்த 24ம் தேதி, மதியம் 2:00 முதல் மாலை 4:30 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளிடம் உரையாற்றினார்.
இதனை விவசாயிகள் நேரடியாக பார்க்கும் வகையில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உர நிறுவனங்கள் சார்பில் உதவி பகுதி மேலாளர் ரகுபதிராஜா உட்பட வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.