/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: 13வது வார்டு கவுன்சிலர் பெருமிதம்
/
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: 13வது வார்டு கவுன்சிலர் பெருமிதம்
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: 13வது வார்டு கவுன்சிலர் பெருமிதம்
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: 13வது வார்டு கவுன்சிலர் பெருமிதம்
ADDED : மே 04, 2024 06:54 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி 13வது வார்டில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன் என கவுன்சிலர் கருணாநிதி கூறினார்.
விருத்தாசலம் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலர் கருணாநிதி கூறியதாவது :
கோல்டன் பள்ளி அருகே 2022 - 23ல் 120 மீட்டருக்கு 10 லட்சம் ரூபாயில் கல்வெர்ட், இருபுற வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை போட்டுள்ளேன்.
ஆயியார்மடம் பின்புறம் 230 மீட்டருக்கு சிறப்பு நிதி 10 லட்சத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டது.
ஆயியார் மடம் பிரதான சாலையில் 260 மீட்டருக்கு 13 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை, 10 லட்சத்தில் புதிதாக போர்வெல், ரமேஷ் எம்.பி., தொகுதி நிதியில் 4 லட்சம் ரூபாயில் ைஹமாஸ் விளக்கு போடப்பட்டுள்ளது. பிருந்தாவன் நகரில் எம்.எல்.ஏ., நிதியில் 10 லட்சத்தில் தார் சாலை, 10 லட்சத்தில் 300 மீட்டருக்கு வடிகால் கட்டித் தரப்பட்டுள்ளது.
மேலும், 2022 - 23ல் நமக்கு நாமே திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வளாகம் அமைக்க 14 லட்சத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளேன்.
அதுபோல், 13வது வார்டு முழுவதும் 25 சிசிடிவி., கேமரா பொறுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் லோக்சபா தேர்தல் காரணமாக நிலுவையில் இருந்த பணிகள், விரைவில் துவங்கப்பட உள்ளன.
பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் சொந்த கட்டடம் கட்டித்தர அனுமதி பெற்றுள்ளேன். இதுதவிர, ஆயியார்மடம் தெருவில் 300 மீட்டருக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. பாலக்கரை ராட்சத நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகள் சீரமைக்கப்பட உள்ளன.
எனது வார்டில் குடிநீர், மின் விளக்கு, கழிவுநீர் வடிகால் என அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தன்னிறைவாக செய்து கொடுத்துள்ளேன். நகர்மன்ற சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி ஒத்துழைப்புடன் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.