/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தள்ளாடும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள்
/
தள்ளாடும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள்
ADDED : ஜூன் 26, 2024 02:24 AM
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், 500 க்கும் மேற்பட்டவை உள்ளன. இதில், 400 க்கும் மேற்பட்டவை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளாகும். கடந்த காலங்களில் பாலிடெக்னிக் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.
ஆனால், அந்நிலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் ஏராளமான பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ள நிலைபயில், கடந்த ஓராண்டாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், கல்லுாரியை நடத்துவதற்கே நிர்வாகம் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பிளஸ் 2 படித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதலாம் ஆண்டிலும் சேர்ந்து படித்து வருகின்றனர். இங்கு, அதிகளவு அரசு பள்ளிகளில் படிப்பவர்களே சேர்ந்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிகளவு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடிப்பவர்கள் அதே பள்ளியில் பிளஸ்1 சேர்ந்து படிக்கின்றனர்.
அங்கு பிளஸ்2 முடிப்பவர்கள் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்து படிக்க சென்று விடுகின்றனர். இதனால், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த காலங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேருவது எளித்தல்ல என்ற நிலை தற்போது மாறிவிட்டது. எளிதில் எந்த கல்லுாரியிலும் இடம் கிடைத்துவிடுகிறது. இதனாலும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் மவுசு குறைந்துள்ளது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் நிதிநிலை பாதிக்கப்பட்டு, பாலிடெனிக்கில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.