ADDED : ஆக 21, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அரசு மருத்துவமனை முன் டாக்டர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.