/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 04:37 AM
பரங்கிப்பேட்டை, : தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க கோரியும், பரங்கிப்பேட்டையில், மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மூத்த தலைவர் கற்பனைச்செல்வம், பு.முட்லூர்ஊராட்சி தலைவர் ஜெயசீலன் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேல்முருகன், அசன் முகமது, அருள்தீபன், முரளி, சிவலோகம், பாண்டியன், தனசேகர், வினோபா, நேதாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.கிளைச் செயலாளர் சிவராஜ், நன்றி கூறினார்.