/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்
/
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்
ADDED : செப் 12, 2024 06:11 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை மெயின் சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சிட்டிபாபு விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இது சம்மந்தமாக புவனகிரியில் தாசில்தார் தனபதி தலைமையில் கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சிட்டிபாபு, குபேந்திரன், சங்கர், வையாபுரி, முருகேசன், மற்றும் சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், டாஸ்மாக் பொதுமேலாளரிடம் விளக்க கடிதம் எழுதி அனுப்பி டாஸ்மாக் கடை திறக்காமல் ரத்து செய்யவதாக உறுதியளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

