/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசை கண்டித்து மறியல் கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
/
போலீசை கண்டித்து மறியல் கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
போலீசை கண்டித்து மறியல் கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
போலீசை கண்டித்து மறியல் கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 21, 2024 05:21 AM

கடலுார்: கடலுார் அருகே, போலீசை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார்-சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலத்தின்போது, இரு கோஷ்டியாக வாலிபர்கள் முன்விரோதம் காரணமாக தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து, தயாநிதி மற்றும் அபினாஷ் இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், ஒரு தரப்பை சேர்ந்த சிவராஜ், 25; அபினாஷ், 24; ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் நேற்று காலை சங்கொலிக்குப்பம் வந்தனர்.
இதையறிந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் திரண்டுவந்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி, கடலுார்- சிதம்பரம் சாலையில் காலை 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலுார்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் டி.எஸ்.பி., பிரபு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். அதையடுத்து, 9:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் கடலுார்- சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

