தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அண்ணாமலை பல்கலை வாயிலில் மறியல் போராட்டம்

அண்ணாமலை பல்கலை வாயிலில் மறியல் போராட்டம்

அண்ணாமலை பல்கலை வாயிலில் மறியல் போராட்டம்


ADDED : ஜூலை 23, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். 

  டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ‘நீட்’ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என்பன, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 போராட்டத்திற்கு மாணவர் நகர தலைவர் சிவநந்தினி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்  சவுமியா மாநிலக்குழு சபரி, மாவட்டதுணை தலைவர் மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனிஷ்கர், மாவட்டக்குழு உறுப்பினர் திருமால், சுனில் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us