/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்
ADDED : மார் 07, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுார் மாநகராட்சி, 3வது வார்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். கவுன்சிலர் கீதா குணசேகரன், தி.மு.க.,நிர்வாகி ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
ராமலிங்கம், விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, பாஸ்கரன், பாலசந்தர், பரணிகுமார், விஷ்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.