/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 20, 2024 12:11 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு, கிளாங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் முன்னணி சார்பில்கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளர் பழனி மனோகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் தங்க குலோத்துங்கன், துணைத் தலைவர் கருணாநிதி, ஆசிரியர் பாரி, வர்த்தக சங்க மணிமாறன், பொறியாளர் சுரேஷ்குமார், வெற்றிவேந்தன், அன்பழகன், மணிகண்டசாமி,ஆனந்தபாபு, விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.