/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : செப் 04, 2024 11:17 AM

நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்திரக்கோட்டை, வெங்கடாம்பேட்டை, இந்திராநகர் ஆகிய 3 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1 மாணவர்கள் 180 பேருக்கும், மாணவிகள் 144 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மீனாம்பிகை வரவேற்றார். விருத்தாசலம் டி.இ.ஓ., துரைபாண்டியன், பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன்,ஊராட்சி தலைவர் தெய்வானை சிங்காரவேல் முன்னிலை வகித்தனர். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள வழங்கினார்.
நிகழ்ச்சியில் வடலுார் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன்,பத்திரக்கோட்டை பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி இந்திரலேகா, இந்திராநகர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவசுந்தரி,வெங்கடாம்பேட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியை சுந்தர்ராஜன்கலந்து கொண்டனர்.
ஆசிரியர் ஜோதிமுத்து நன்றி கூறினார்.