ADDED : மார் 24, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லிக்குப்பம், வைடிபாக்கம் சிவசண்முகம் நகரைச் சேர்ந்த நாராயணசாமி. இவரது கூரை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
தகவலறிந்த தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார். மாவட்ட பிரதிநிதி வேலு, பொருளாளர் ஜெயசீலன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உடனிருந்தனர்.

