/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனச்சிதைவு நோய் கட்டுப்படுத்துவது எப்படி மனநல மருத்துவர் பார்த்தீபன் விளக்கம்
/
மனச்சிதைவு நோய் கட்டுப்படுத்துவது எப்படி மனநல மருத்துவர் பார்த்தீபன் விளக்கம்
மனச்சிதைவு நோய் கட்டுப்படுத்துவது எப்படி மனநல மருத்துவர் பார்த்தீபன் விளக்கம்
மனச்சிதைவு நோய் கட்டுப்படுத்துவது எப்படி மனநல மருத்துவர் பார்த்தீபன் விளக்கம்
ADDED : மே 24, 2024 05:39 AM
கடலுார்: மனச்சிதைவு நோயை உளவியல் ஆலோசனை மூலமாக குணப்படுத்த முடியும் என, கடலுார் மைண்ட் கிளினிக் நிறுவனரும், மனநல மருத்துவருமான பார்த்தீபன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் ஆண்டு தோறும் மே மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனச்சிதைவு நோயால் மனிதனின் சராசரி வாழ்க்கையின் செயல்பாடு பாதிக்கக் கூடும். இந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களிடம் உள்ள தவறான அபிப்ராயத்தை சமூகத்தில் மாற்ற முடியும். சுற்றி இருப்பவர்கள் மீது காரணமற்ற சந்தேகம் கொள்ளுதல். தனிமையில் இருக்கும்போது காதில் யாரோ பேசுவது போல் உணர்வது. தனிமையில் பேசிக்கொள்வது. தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்வது. தன் உடல் மற்றும் எண்ணங்களை வேறு ஒருவர் இயக்குவது போல் உணர்வது. துாக்கம் மற்றும் உணவு உட்கொள்வதில் மாற்றம். எதிலும் ஈடுபாடில்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
இந்நோய் 100 பேரில் ஒருவருக்கு வரக்கூடும். பெரும்பாலும் 16 முதல் 25 வயதுடையவர் வரையில் பாதிக்கும். மரபணு ரீதியாக பரம்பரையாகவும், மூளையுனுள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், மது, கஞ்சா போன்ற பழக்கங்களாலும் இப்பிரச்னை வரலாம்.
பேய், பிசாசு போன்ற காரணங்கள் கூறுவது தவறானது. இந்நோய் ஏற்பட்ட நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்று சரியான சிகிச்சை பெற உதவி செய்வதை பொருத்து குணமடையும். நோய் பாதித்தவர் மனிதர் என்பதை முதலில் புரிந்து கொண்டு அரவணைப்போடு நடத்த வேண்டும். சரியான மருத்துவம், ஆரோக்கியமான உணவு முறை, நல்ல குடும்ப சூழல், பாதுகாப்பான சுற்றுச்சூழல், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றால் நோயை உடனடியாக குணப்படுத்தால்.
நோய் பாதிக்கப்பட்ட நபரின் நடத்தையை தவறாக சித்தரிக்க கூடாது. கேலி, கிண்டல், தனிமைப்படுத்துதல் கூடாது. ஆங்கிலவழி மருத்துவமுறையில் மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்தின் பயன்பாடு, கால அளவு உணவு முறை மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.
நோயின் காரணத்தை அறிய ரத்த பரிசோதனைகள், சிடி ஸ்கேன் எடுக்கலாம். குடும்ப நல ஆலோசனை மூலமாக நோயின் தீவிரத்தை குறைக்கலாம். உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி, குழுவோடு இணைந்து செயல்படுதல், வேலை சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுத்துதல் மூலமாக நோயில் இருந்து முழுவதுமாக குணமாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தொடர்புக்கு: ௭௪௦௬௬௫௧௮௪௦.