/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : செப் 15, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில், வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.
குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முகாமில் கடலுார் வட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். இதில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.