/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்ளாட்சி நிர்வாகங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு புலம்பும் பொதுமக்கள்
/
உள்ளாட்சி நிர்வாகங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு புலம்பும் பொதுமக்கள்
உள்ளாட்சி நிர்வாகங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு புலம்பும் பொதுமக்கள்
உள்ளாட்சி நிர்வாகங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு புலம்பும் பொதுமக்கள்
ADDED : மார் 05, 2025 04:53 AM
மாவட்டத்தில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 14 ஒன்றியங்களும், அதன் கீழ் 683 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பிரநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜன., 5ம் தேதியுடன் அவர்களது பதவிக்காலம் முடிவடைந்தது.
அதையடுத்து, வார்டுகள் மறுவரையறை செய்யும் பணி, மாநகராட்சி, நகராட்சிகளுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணி நடக்கிறது.
இப்பணிகள் முடிந்தபிறகே தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் உள்ளாட்சி நிர்வாகங்களை கண்காணிப்பதற்காக தனிஅலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், கடலுார் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றை தனிஅலுவலர்கள் முறையாக பராமரிப் பதில்லை எனவும், அதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் தலை துாக்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், உள்ளாட்சி நிர்வாகங்களில் ஆளும்கட்சி பிரமுகர்களின் தலையீடு உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் தனிஅலுவலர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
ஆளும்கட்சி பிரமுகர்கள் அனுமதி கிடைத்தால் தான் காரியம் நடக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.