/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
/
சாலை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஏப் 11, 2024 11:42 PM

கடலுார் : கடலுார் அருகே சாலை அமைக்கக்கோரி, வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பாபு நகரில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, நேற்று வாகனங்கள் மண் கொட்டுவதற்கு வந்தது. இதைக்கண்ட சுப்பிரமணியன் தெருவில் உள்ள பொதுமக்கள், தங்கள் தெருவில் சாலை அமைக்கக்கோரி வாகனங்களை திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் கூறினர்.
தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, வாகனங்களை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

