/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்துக்களின் சந்தை மதிப்பு வெளியீடு பொதுமக்களிடம் கருத்து கேட்பு
/
சொத்துக்களின் சந்தை மதிப்பு வெளியீடு பொதுமக்களிடம் கருத்து கேட்பு
சொத்துக்களின் சந்தை மதிப்பு வெளியீடு பொதுமக்களிடம் கருத்து கேட்பு
சொத்துக்களின் சந்தை மதிப்பு வெளியீடு பொதுமக்களிடம் கருத்து கேட்பு
ADDED : ஜூன் 14, 2024 06:29 AM
கடலுார்: முத்திரை தாள் பத்திரப்பதிவு துறையில் வெளியிடப்பட்டுள்ள சொத்துக்களின் சந்தை மதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்;
தமிழ்நாடு அரசு முத்திரை தாள் பத்திரப்பதிவு துறையில் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைக்கும் வகையில் இந்திய முத்திரைச் சட்டத்தின் படி அரசு மதிப்பீட்டுக் குழு மூலம் சொத்துக்கள் சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க, சொத்து மதிப்பீடு செய்தல், திருத்தியமைத்தல் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடுதயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விவரங்களை www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருந்தால், அதனை 15 நாட்களுக்குள் கடலுார் திருப்பாதிரிபுலியூர் சங்கரநாயுடு தெரு மாவட்ட நிர்வாக பதிவாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.