/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு
ADDED : மே 28, 2024 05:03 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உதவித்தொகை வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளி நலச்சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி மாற்றுத்திறனாளி நலச்சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் மாற்றுத்திற னாளிகள் இணைந்து, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
தகவலறிந்த நேர்முக உதவியாளர் செல்வமணி, அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, மூன்று சக்கர வாகனத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
மனுவில், கடந்த 2023 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டக்குடி தாசில்தார் அலுவலகம் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பெற புதிதாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுநாள் வரை பணம் வரவில்லை. ஓராண்டாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.