ADDED : மார் 05, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகளின் 430 வது அவதார தினம் நாளை அவதார இல்லத்தில் நடக்கிறது.
புவனகிரி ராகவேந்திரர் சுவாமிகளின் அவதார இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வழிபாடுகள் தினசரி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அவரது அவதார தின விழா சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 430 வது விழாவை முன்னிட்டு நாளை (6ம் தேதி) அதிகாலை 5.00 மணிக்கு சுப்ரபாதத்துடன் விழா துவங்குகிறது. அதிகாலை 6.00 மணிக்கு நிர்மல்ய அபிஷேகம், காலை 9.00 மணிக்கு அபிஷேகம், 12.00 மணிக்கு தீப ஆராதனை, இரவு ஸ்வதிபூஜை நடக்கிறது.