ADDED : ஜூலை 22, 2026 05:51 PM
கடலுார்: டில்லியில் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலுாரில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நீட் முறைகேடு விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லியில் நடந்த போராட்டத்தில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே, அம்பேத்கர் சிலை முன்பு கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகர், மாநகர தலைவர் வேலுசாமி, ஊடகப்பிரிவு ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஓ.பி.சி., அணி ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார தலைவர்கள் சீத்தாராமன், ராமகிருஷ்ணன், நகர தலைவர் ரவிக்குமார், ராமராஜன், மாரியப்பன், பிரகாஷ், சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
