/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாசில்தார் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்
/
தாசில்தார் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்
ADDED : ஆக 21, 2024 07:39 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி தாலுகாவில், சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டர் மற்றும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டது தமிழகத்தையே அதிர வைத்தது. அதற்குப்பின் வந்த தாசில்தார்கள் அந்த துறையை முறைப்படுத்தாமல், தான் சிக்கலில் மாட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
பெரும்பாலும் அலுவலகத்திற்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
முகாம், மீட்டிங் என தினமும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி எஸ்கேப் ஆகி வருகின்றனர். இதைப்பயன்படுத்தி பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் பலர், இறப்பு நிவாரணத்திற்கு 5ஆயிரம் ரூபாய், உதவித்தொகை பெற்றுத்தர 4ஆயிரம் ரூபாய் என வசூல்வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்கள் அதிகாரிகளை நேரடியாக சந்திக்க முடியாததால், இடைத்தரகர்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

