/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரங்கநாதபுரம் உயர்நிலை பள்ளி ஆண்டு விழா
/
ரங்கநாதபுரம் உயர்நிலை பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 04, 2025 07:05 AM

கடலுார்; குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் தணிகைவேல் மணியரசு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பொம்மி வரவேற்றார்.
கணித ஆசிரியர் ராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, விருத்தாசலம் திரு.வி.க., நகர் நகராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் லாசர், பொதுமறை திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் அருள்ஜோதி ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், ஆசிரியர்கள் முருகவேல், குமரேசன் உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் நவநீதசங்கர் நன்றி கூறினார்.