ADDED : ஜூலை 17, 2026 07:22 PM
கடலுார்: மாவட்டத்தில் ரேஷன் கார்டில் அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு புதுப்பிக்க வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கே.ஒய்.சி., கைரேகை பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
இதற்காக கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி ஆகிய தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஆதார் இ–சேவை மையங்களி்ல் வரும் 20ம் தேதி முதல், 25ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் கைரேகை, கருவிழி பதிவு இல்லையெனில் ஆதார் விவரங்களை புதுப்பித்த பிறகே கே.ஒய்.சி., செய்ய முடியும். ஆதார் புதுப்பித்த பிறகு அனைத்து வேலை நாட்களிலும் ரேஷன் கடைகளில் கே.ஒய்.சி., பணியை நிறைவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
